Saturday 4 January 2014

VIDIYUM MUN

VIDIYUM MUN-2013-THRILLER/DRAMA

பார்த்த எல்லா படத்தையும் பகிர எனக்கு விருப்பம் இல்லை என் மனதை தொட்ட படங்களையே நான் பகிர விரும்புகிறேன்  அப்படி வெகு நாட்கள் கழித்து என்னை எழுத தோன்றிய படம் விடியும் முன்  





இந்த படத்தை பற்றி சொல்ல ஒன்றும் புதிதாய் இல்லை என்று சொன்னாலும் சில யதார்த்தத்தை நாம் இழந்து விட்டோம் என்று சொல்ல தொனிய படம், மாற்றம் என்றே திரிந்த நாம் எதிலும் முழுதாய் கற்க வில்லை இந்த படம் என்ன தான் இருட்டில் எடுத்தாலும் மூஞ்சியை சுளிக்க விடாமல் எடுத்த படம், கொஞ்சம் சமுதாயத்துக்கு தேவையான படமும் கூட 






முதலில் பூஜாவும் அந்த குழந்தையும் சுற்றி நடக்கும் கட்சிகள் பிரமாதம் அந்த ரூமில் என்னதான் நடந்தது என்று நமக்கும் கொஞ்சம் விறுவிறுப்பு ஏறிகொண்டது படத்தில் முடிச்சுகள் மெல்ல மெல்ல எடுப்பது பிரமாதம் படத்தின் களம் புதிது படத்தில் எது தேவையோ அதை மிக அழகாக வாங்கி இருக்கிறார் இயக்குனர், வில்லனை அதிகம் பேசாமல் செய்கையால் செய்யும் விதம் நன்று கிளைமாக்ஸ் வரை திருப்பம் மெல்ல மெல்ல நகர்வது நன்று எதையும் மறைத்து வைத்து சஸ்பென்ஸ் என்று கொடுக்காமல் அவர்களுக்கு எது தெறியுமோ அதை வைத்து கதை நகர்வது நன்று 





மொத்தம் ஒரு 5 முக்கிய கேரக்டர் அதை சுற்றி நடக்கும் சீன்கள் ஜான் விஜய், அமரேந்திரன் மற்றும் வினோத் எல்லாம் நன்கு நடிப்பை வெளிபடுதியவர்கள் தான் ஆனாலும் இதில் நிறைய வேலை செய்து இருக்கிறார்கள் ஜான் விஜய்  நிறைய படம் பார்த்திருப்போம் வினோத் நான் மகான் அல்ல மற்றும் கிரீடம்  அமரேந்திரன் பலே பாண்டியாவில் காமெடி வில்லன் னாக நடித்திருப்பர் என்னக்கு தெரிந்து இந்த படத்தில் தான் ஹீரோ ஹீரோயின் வில்லன் என்று இல்லாமல் இவை அனைத்தும் எல்லோர்குள்ளும் இருக்கிறார்கள் என்று அருமையாக சொல்லி இருக்கிறார்கள்  









படத்தில் எல்லாம்  நன்று ஆனால் இந்த படத்தை இரண்டாவது முறை பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி கிளைமாக்ஸ் வரும் பட்டாம் பூச்சி சூப்பர் நீங்கள் முதல் முறை பார்க்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் படத்தில் பின்னணி இசை மிகப்பெரும் பலம் பாட்டு தேவையே இல்லை என்று சிலர் படம் எடுப்பார்கள் ஆனால் இதில் வரும் பாடல்கள் எல்லாம் படத்தோடு ஒன்றியவை எல்லாம் அருமை பார்ல வேண்டிய படம் தான் 



படத்தின் சிக்ஸர் சில 
திரைக்கதை 
இயக்கம் 
களம் 
குழந்தையின் நடிப்பு 
இசை 




படத்தின் சொதப்பல்கள் சில 
பூஜா சில இடங்களில் modulation (நான் கடவுள் ) போல தெரிகிறது 





படத்தின் trailer 








படத்துக்கு ரேட்டிங் 




Vidiyum Munn

Directed byBalaji K. Kumar
Produced byJaved Khayum
StarringPooja Umashankar
Malavika Manikuttan
Vinoth Kishan
Music byGirishh Gopalakrishnan
CinematographySivakumar Vijayan
Editing bySathyaraj
Distributed byPVR Pictures
Release datesNovember 29, 2013
CountryIndia
LanguageTamil